Welcome to Jettamil

வவுனியாவில் வாகன விபத்து – ஸ்தலத்தில் பொலிஸ் பலி

Share

வவுனியா நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஸ்தலத்தில் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவமானது வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ-9 வீதி விளக்குவைத்தகுளத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்

யாழில் இருந்து வவுனியா நோக்கி வந்த கப் ரக வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வவுனியாவில் இருந்து புளியங்குளம் நோக்கி வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை ஒமந்தை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த விபத்தில் கண்டியை சேர்ந்தவரும் புளியங்குளம் பொலிஸ் கான்ஸ்டபிளுமான 55 வயதுடைய கருணாதிலக்க என்பவரே பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை