Friday, Jan 17, 2025

யாழ்ப்பாண மக்களுக்கு எச்சரிக்கை: கொட்டித் தீர்க்கப்போகும் மழை

By jettamil

யாழ்ப்பாண மக்களுக்கு எச்சரிக்கை: கொட்டித் தீர்க்கப்போகும் மழை

யாழ்ப்பாணத்தில் அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் அனர்த்தங்களால் 610 குடும்பங்களைச் சேர்ந்த 2294 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 வீடுகள் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனைத்து முகாமைத்துவ பிரிவின் பிரதிபலிப்பாளர் ரி.என். சூரியராஜா தெரிவித்துள்ளார்.

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில், மாத்தளை மாவட்டத்திலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் உள்ளது. மேலும், மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக் கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, மேலே உள்ள பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 30-40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசலாம். இதனால், மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடியதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டப்படுகிறது.

மின்னல் தாக்கங்களால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு