Welcome to Jettamil

சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் எப்போது வெளியாகும் ?

Share

இந்நாட்களில் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் எப்போது வெளியாகும் என மாணவர்கள் இந்நாட்களில் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதியில் வெளியிட எதிர்பார்ப்பதாக என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்திருந்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இந்த நாட்களில் பரீட்சை பெறுபேறுகளை கணனிமயமாக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாக தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், பொதுப் பரீட்சை பெறுபேறுகளை இன்னும் இரண்டு நாட்களில் வெளியிட முடியும் என அண்மையில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், உயர்தரப் பரீட்சை திட்டமிட்ட தினத்தில் நடைபெறும் என தெரிவித்தார்.

“உயர்தரப் பரீட்சை தாமதமாகாது. பரீட்சை அட்டவணை அச்சிடப்பட்டுள்ளது. மாணவர்கள் தயாராக உள்ளனர். இரண்டு தரப்பினரும் மட்டுமே நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளனர். தேவையான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து வருகிறோம். உயர்தரப் பரீட்சை மூன்று மாதங்கள் தாமதமானால், மார்ச், ஏப்ரல் திட்டமிடப்பட்ட சாதாரண தர பரீட்சை மே, ஜூன் மாதங்களுக்கு சென்று விடும்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை