பாகிஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதியாக பெண் ஒருவர் வரலாற்றில் முதல் முறையாக நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தானில் உயர் நீதிமன்ற முதல் பெண் நீதிபதி என்ற பெருமையை நீதிபதி ஆயிஷா மாலிக் (Ayesha Malik) பெற்றுள்ளார்.
லாகூரில் ஆயிஷா மாலிக் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டால், நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் மூடப்படும் என பாகிஸ்தான் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கழகத்தின் ( Bar Council) தலைவர் லாதிஃப் அப்ரிடி மிரட்டல் விடுத்திருந்தார்.
அத்துடன் நீதிபதி ஆயிஷா சீனியாரிட்டி அடிப்படையில் 4-வது இடத்தில் உள்ளதால் அவரை உயர் நீதிமன்றத்திற்கு முதலில் அனுப்புவது தவறு என பாகிஸ்தான் வழக்கறிஞர் கழகம் தெரிவித்தது.
நீதிபதி ஆயிஷாவை உயர் நீதிமன்ற நீதிபதியாக உயர்த்த பாகிஸ்தான் நீதித்துறை ஆணையத்தின் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதன் காரணமாக பாகிஸ்தான் வரலாற்றில் உயர் நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி என்ற பெருமையை நீதிபதி ஆயிஷா மாலிக் பெற்றுள்ளார்.