Welcome to Jettamil

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் நாட்டை வந்தடைந்தார்

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ்

Share

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் நாட்டை வந்தடைந்தார்

உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO) பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் இன்று ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 12) இலங்கையை வந்தடைந்தார்.

அவர் இன்று காலை 9:40 மணிக்குக் கட்டார், டோஹாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

விமான நிலையத்தின் சிறப்பு விருந்தினர் ஓய்வறையில், சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க அவரை வரவேற்றார்.

கொழும்பில் நடைபெறவுள்ள 78வது தென்கிழக்கு ஆசிய பிராந்திய சுகாதார உச்சி மாநாட்டில் (78th WHO Regional Committee for South-East Asia) டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் பிரதம விருந்தினராகப் பங்கேற்க உள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த உச்சி மாநாடு, அக்டோபர் 13ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெற உள்ளது. தென்கிழக்கு ஆசிய பிராந்திய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுகாதார அமைச்சர்களும் இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கைக்கு வருகை தரவுள்ளனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை