உலகின் மிகப்பெரிய சிவப்பு ரத்தினம் அமெரிக்காவின் நியூயார்க்கில் ஜூன் 8 ஆம் தேதி ஏலம் விடப்பட உள்ளது.
“Esterla de Fura” என்று பெயரிடப்பட்ட இந்த சிவப்பு ரத்தினம் 55.22 காரட் எடை கொண்டது.
இந்த ஏலத்தை Sotheby’s Magnificent Jewels நிறுவனம் நடத்துகிறது மற்றும் இதன் அடிப்படை விலை 30 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த விலைக்கு விற்கப்பட்டால், உலகிலேயே அதிக விலைக்கு விற்கப்படும் சிவப்பு ரத்தினம் என்ற வரலாற்றிலும் இது இடம்பெறும்.
இந்த சிவப்பு ரத்தினம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் மியான்மரில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், பின்னர் முதற்கட்ட விற்பனைக்குப் பிறகு வெட்டி பாலிஷ் செய்து ஏலத்தில் விடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.