ஜனவரி 18, சனிக்கிழமை உங்கள் ராசிபலன்கள்!
மேஷம்:
இந் நாள் சாதாரண செயல்களுடன் கடந்து செல்லும். சிலருக்கு குடும்பத்துடன் கோயிலுக்கு சென்று பிரார்த்தனை செய்யும் வாய்ப்பு இருக்கலாம். தாய் வழி உறவுகளால் சில செலவுகள் ஏற்படும். வயிற்று பிரச்னைகள் ஏற்படக்கூடும், ஆகையால் உணவு உட்கொள்வதில் கவனம் தேவை. அலுவலகத்தில் பணி நெருக்கடி குறையும், வியாபாரத்தில் சில சிக்கல்கள் எழலாம்.
ரிஷபம்:
இன்று வாழ்க்கைத்துணையின் மூலம் செலவுகள் ஏற்படும், ஆனால் பணம் இருப்பதால் அதை சமாளிக்க முடியும். தாய்மாமன் மூலம் நல்ல செய்தி கிடைக்கக்கூடும். கணவன் மற்றும் மனைவிக்கிடையே சிறு பிரச்னைகள் இருக்கக்கூடும், அதனால் பொறுமையுடன் நடந்து கொள்ளவும். அலுவலகத்தில் பணிச்சுமை இருந்தாலும், அதை நன்றாக சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் கூடுதல் உழைப்பு தேவைப்படும்.
மிதுனம்:
இன்று அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றியடைந்தும், உங்கள் மனதில் தைரியம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணை உங்கள் பக்கத்தில் இருக்கும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை, அதிகாரிகளின் பாராட்டுகள் உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் வரும்.
கடகம்:
தந்தை வழி உறவுகளிடமிருந்து உதவி கிடைக்கும். தந்தையின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவு ஏற்படும். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த செய்தி தாமதமாக வரும். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கவனமாக இருக்கவும். வியாபாரத்தில் சிறிய பிரச்னைகள் ஏற்படும்.
சிம்மம்:
சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகள் இருந்தாலும், தேவையான பணம் இருக்க வாய்ப்பு உள்ளது. அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். வியாபாரத்தில் விற்பனை மற்றும் லாபம் உயரும்.
கன்னி:
இன்று பொறுமையுடன் செயல்பட வேண்டும். தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை. வியாபாரத்தில் வழக்கமான விற்பனை நடக்கும்.
துலாம்:
இன்று மகிழ்ச்சி தரும் ஒரு நாள். கணவன்-மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். குடும்பம் தொடர்பான முடிவுகளைத் தடுத்து வைக்க விரும்புகிறீர்கள். அலுவலகத்தில் கூடுதல் பொறுப்பு ஏற்படும், ஆனால் உற்சாகமாக செயல்படுவீர்கள். வியாபாரத்தில் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கலாம்.
விருச்சிகம்:
எதிர்பாராத பணவரவு உண்டாகும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களின் உதவியுடன் மகிழ்ச்சியடைவீர்கள். அரசாங்க காரியங்கள் அனுகூலமாக முடியும். வியாபாரத்தில் லாபம் எதிர்பார்க்கப்படுகிறது.
தனுசு:
புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் இருக்கவும். அரசாங்க விஷயங்களில் தாமதம் ஏற்படும். தேவையற்ற செலவுகளால் மனசில குழப்பம் ஏற்படும். பொறுமையுடன் செயல்படுவது நல்லது. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும், ஆனால் சக பணியாளர்கள் உதவிகள் கிடைக்கும்.
மகரம்:
இன்று பொறுமையுடன் செயல்பட வேண்டும். புதிய முயற்சிகள் தவிர்க்கப்பட வேண்டும். தாய்மாமன் வழி செலவுகள் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத பணவரவு கிடைக்கும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை நிலவும். வியாபாரத்தில் பணியாளர்களின் உதவியால் லாபம் அதிகரிக்கும்.
கும்பம்:
அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். கணவன்-மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை தீர்ந்து, அன்பு அதிகரிக்கும். உடல் நலத்துக்கு கவனம் தேவை. அலுவலகத்தில் கூடுதல் பொறுப்பு வரும். வியாபாரத்தில் லாபம் சுமாராகவே இருக்கும்.
மீனம்:
மன உறுதியுடன் செயல்படுவீர்கள். புதிய முயற்சி வெற்றிகரமாக முடியும். குடும்பத்தில் எடுக்கும் முடிவுகள் சாதகமாக முடியும். சகோதரர்களுக்கான உதவிகள் மேற்கொள்ளப்படும். அலுவலகத்தில் உங்கள் பணிகளை நேரடியாக செய்ய வேண்டும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் உதவி உங்களுக்கு லாபம் தரும்.