20 சதவீதத்தால் மின்கட்டணம் குறைப்பு!
இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு, மின்கட்டணத்தில் சராசரியாக 20% குறைப்பை அறிவித்துள்ளது. இந்த தீர்மானம் 17 ஆம் தேதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என, ஆணைக்குழுவின் தொடர்பாடல் பிரிவு பணிப்பாளர் ஜயனாத் ஹேரத் தெரிவித்தார்.
வீட்டுப் பிரிவில் 0-30 அலகுகளுக்கான கட்டணம் ரூ.6-இல் இருந்து ரூ.4-ஆக குறைக்கப்படவுள்ளது. அதேபோல், 31-60 அலகுகளுக்கான கட்டணம் ரூ.9-இல் இருந்து ரூ.10-ஆக மாற்றம் செய்யப்பட உள்ளது.
இந்த புதிய கட்டண திருத்தம் முதல் ஆறு மாதங்களுக்கு அமல்படுத்தப்படும் என அவர் கூறினார்.