ஜனவரி 01ஆம் திகதி புதன் கிழமையில் உங்கள் ராசிக்கான பலன்கள்
மேஷம்
மேஷராசி அன்பர்களே! இன்று அதிர்ஷ்டகரமான நாள். புதிய முயற்சிகள் வெற்றிகரமாக முடியும். சகோதர வகையில் எதிர்பாராத ஆதாயம் ஏற்படும். தந்தை வழி உறவினர்களால் உதவி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கிட்டும், ஆனால் செலவுகளும் ஏற்படும். வீணான விவாதங்களை தவிர்க்கவும். அலுவலகத்தில் மறைமுக எதிர்ப்புகள் நீங்கி, வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷபராசி அன்பர்களே! இன்று பரபரப்பான நாளாக இருக்கும். பிள்ளைகள் தேவையற்ற செலவுகளை ஏற்படுத்தக்கூடும். உணவு பொருட்களில் கவனம் தேவை. உறவினர்களின் வருகையால் சற்று சங்கடங்கள் ஏற்படக்கூடும். பொறுமையுடன் செயல்படவும். அலுவலகத்தில் பிற ஊழியர்களின் வேலைகளை மேற்கொள்வது அவசியம். வியாபாரத்தில் பிற்பகல் பணியாளர்களால் பிரச்னைகள் உண்டாகலாம்.
மிதுனம்
மிதுனராசி அன்பர்களே! புதிய முயற்சிகளை தவிர்க்கவும். உடல் நலத்தில் கவனம் தேவை. தாய்மாமன் வழியிலும் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். கணவன் – மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் தீர்ந்து, உறவுகள் மேம்படும். அலுவலகத்தில் வழக்கமான நிலை காணப்படும். வியாபாரத்தில் லாபம் குறைவாக இருக்கும்.
கடகம்
கடகராசி அன்பர்களே! அரசாங்கக் காரியங்களில் சாதகமான முடிவுகள் உண்டாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும். வாழ்க்கைத்துணைவழியில் சில செலவுகள் ஏற்படும். இளைய சகோதரங்களிடம் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும், உங்களுடைய செயல்பாடுகளால் பாராட்டுகள் கிடைக்கும்.
சிம்மம்
சிம்மராசி அன்பர்களே! இன்று தொடங்கும் காரியங்கள் சாதகமாக முடியும். சிலருக்கு திடீர் செலவுகள் ஏற்படலாம். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகள் இன்றைக்கு எடுக்க வேண்டாம். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் மனஸ்தாபம் ஏற்படலாம்.
கன்னி
கன்னிராசி அன்பர்களே! எதையும் பலமுறை யோசித்து எடுக்கவும். குடும்பத்தில் மற்றவர்களுடன் கலந்தாலோசனைகள் தேவையாகும். கணவன் – மனைவிக்கிடையே சிறு பிரச்னை ஏற்படலாம். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். அலுவலகத்தில் கூடுதல் கவனம் தேவை. வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவியுடன் திட்டங்களை முன்னெடுக்க முடியும்.
துலாம்
துலாராசி அன்பர்களே! இன்று உற்சாகமாக செயல்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் செலவுகள் ஏற்படும். வாழ்க்கைத்துணை உங்கள் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்வது ஆறுதலாக இருக்கும். இளைய சகோதரங்களிடமிருந்து ஆதாயம் கிடைக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும், சக பணியாளர்களின் உதவியுடன் தைரியமாக செயல்படுவீர்கள். வியாபாரத்தில் நிலை வழக்கம்போல இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிகராசி அன்பர்களே! இன்று உற்சாகமான நாள். தொட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் எதிர்பாராத ஆதாயம் கிடைக்கும். சிலருக்கு பணவரவு வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் சிறு பிரச்னைகள் ஏற்படலாம், ஆனால் பாதிப்பு குறைந்திருக்கும்.
தனுசு
தனுசுராசி அன்பர்களே! இன்று உற்சாகமான நாள். சகோதரர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். பிள்ளைகளின் விருப்பத்தை பூர்த்தி செய்வீர்கள். சிலருக்கு திடீர் பணவரவு வாய்ப்பு உண்டு. பிற்பகல், கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் அதிகாரிகளின் ஆலோசனைகள் பயனளிக்கும்.
மகரம்
மகரராசி அன்பர்களே! இன்று எதிலும் அவசரமில்லாமல் செயல்படவும். உறவினர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும். பிள்ளைகள் செலவுகளை ஏற்படுத்தலாம். வாழ்க்கைத்துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. வியாபாரத்தில் விற்பனை சுமாராக இருக்கும்.
கும்பம்
கும்பராசி அன்பர்களே! இன்று மனதில் குழப்பம் ஏற்படும். அன்றாடப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. தாய்வழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி இருக்கும். கணவன் – மனைவிக்கிடையே வீண் விவாதங்கள் ஏற்படலாம். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பது உற்சாகம் தரும். வியாபாரத்தில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும், ஆனால் பாதிப்பு குறைந்திருக்கும்.
மீனம்
மீனராசி அன்பர்களே! புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். உறவினர்கள் வருகையால் வீட்டில் கலகலப்பாக இருக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணை மகிழ்ச்சியை தருவார். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும்.