கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்ட அதிகமான நபர்களுடன் யாழ் கொத்தணி தொடர்ந்து வளர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றையதினம் காலை மேலும் 17 பேர் கொவிட் -19 தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தாக கொவிட் -19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
நேற்றையதினம் அதிகமான மக்களுக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாகவும், இன்று காலை சரியான எண்ணிக்கை எதிர்பார்க்கப்படுவதாகவும் யாழ்ப்பாண அதிகாரிகள் தெரிவித்தனர்.
பல பி.சி.ஆர் சோதனைகளின் முடிவுகள் வெளிவர இருப்பதாக, யாழ்ப்பாண பிரதேச செயலாளர் எஸ்.சுதர்சன் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் கடைகளும் மூடப்பட்டிருப்பதால் அதிக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.