தமிழ் பேசும் ஊடகவியலாளர்களே அதிகம் படுகொலை!
2004ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை நாட்டில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களில் தமிழ் பேசும் ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை அதிகம் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், இந்த விடயம் தொடர்பாக தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் எட்டிய நடவடிக்கைகள் குறித்தும் கேள்வி எழுப்பினார்.
IMF ஒப்பந்தம் குறித்த முக்கிய அறிவிப்பு நாளை…
மேலும், கோட்டாபய ராஜபக்சின் தலைமையிலான அரசாங்கத்தில் இந்த விடயத்தை ஆராய்வதற்காக குழு நியமிக்கப்பட்டிருந்தாலும், இந்த படுகொலைகள் அரசியல் பழிவாங்கல்கள் காரணமாக நிகழ்ந்ததாகக் கூறி, அந்த அனைத்து விவரங்களும் மூடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கூறினார்.