எரிபொருள் தட்டுப்பாடு இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம் என அறிவிப்பு
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட எந்த சாத்தியக்கூறுகளும் இல்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
அதேசமயம், இன்று (02) எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதன் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்தார்.
மேலும், மேல் மாகாணத்திலிருந்து ஏற்கனவே சுமார் 500 எரிபொருள் முன்பதிவுகள் பெறப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
நாட்டில் எரிபொருள் தீர்ந்து போவதில் எந்தவொரு பிரச்சினையும் ஏற்படாது. வதந்திகளுக்குப் பயந்துகொண்டு மக்கள் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு செல்வதுதான் இந்தப் பிரச்சினையை உருவாக்கும் என அவர் நினைவூட்டினார்.