இலங்கையின் கிழக்குப் பகுதியை அண்மிக்கவிருக்கும் காற்று சுழற்சி
இலங்கையின் தென்கிழக்காக உருவாகி இருக்கின்ற காற்று சுழற்சியானது இலங்கையின் கிழக்குப் பகுதியை அண்மிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையை எதிர்வரும் 3ஆம் திகதியளவில் நெருங்கி 4, 5 மற்றும் 6ஆம் திகதிகளில் இலங்கையின் கிழக்குப் பகுதியை அண்மிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடலில் மாலைதீவிற்கு அருகே காணப்படுகின்ற காற்று சுழற்சியானது மேற்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது.
மேலும், இலங்கையின் தென்கிழக்காக உருவாகி இருக்கின்ற காற்று சுழற்சியானது அதன் பின்னர் எதிர்வரும் 07 – 10ஆம் திகதிகளில் தமிழ்நாட்டின் மத்திய மாவட்டங்களை அல்லது இலங்கையின் வடபகுதியை நெருங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றிரவு வேளைகளில் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
குறித்த இந்த வானிலை வடக்கு, மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா, மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் 75 மில்லிமீற்றர் வரையான மழைவீழச்சி பதிவாகக் கூடிய சாத்தியம் நிலவுகிறது.
அத்துடன் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மணித்தியாலத்துக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.