Thursday, Jan 16, 2025

இழப்பீடுக்களுக்கான அலுவலகத்தினால் ஆரி வேக்ஸ், தையல் பயிற்சியின் அங்குராப்பண நிகழ்வு

By kajee

இழப்பீடுக்களுக்கான அலுவலகத்தினால் ஆரி வேக்ஸ், தையல் பயிற்சியின் அங்குராப்பண நிகழ்வு

இழப்பீடுக்களுக்கான அலுவலகத்தின் ஏற்பாட்டில், வாழ்வாதார நிகழ்ச்சித் திட்டத்தினை ஊக்குவிக்கும் வகையில் ஆரி வேக்ஸ் மற்றும் தையல் பயிற்சியினை ஆரம்பிக்கும் நிகழ்வு நேற்று யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சாவற்கட்டு பகுதியான ஜே/131 பிரிவில், இழப்பீடுக்களுக்கான அலுவலகத்தின் யாழ்ப்பாண மாவட்ட செயலக உத்தியோகத்தர் மு.கயோதரன் தலைமையில் நடைபெற்றது.

இவ் நிகழ்வினை அங்குராப்பணம் செய்து வைப்பதற்காக இழப்பீடுக்களுக்கான அலுவலகத்தின் பணிப்பாளர் அனுராதி பெரேரா, கலந்துகொண்டு உத்தியோக பூர்வமாக ஆரி தையல் பயிற்சியினை அங்குராப்பணம் செய்துவைத்தார்.

மூன்று மில்லியன் ரூபா பெறுமதியான தையல்பயிற்சி வேலைக்கான மூலக்கூறுகளும், துணிகள், தையல் உபகரணங்களும் வழங்கப்பட்டதுடன்
நாற்பது யுவதிகளுக்கான கைவினை மூலக்கூறுகளும் பகிர்தளிக்கப்பட்டன.

இவ் நிகழ்வில் சண்டிலிப்பாய் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி நேசரட்ணம் செல்வகுமாரி, யாழ்ப்பாண மாவட்ட இழப்பீடுக்களுக்கான அலுவலகத்தின் தலைமை அலுவலக உத்தியோகத்தர் அருண் பிரதீபன், ஆரி தையல் நெறி பாடகியான ஆசிரியர் மிதுலா திருநாவுக்கரசு உள்ளிட்ட,ஜே.131 பிரிவில் கிராம சேவையாளர், பயிற்சி நெறியாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு