Jet tamil
இலங்கை

ஒவ்வொரு இலங்கை குடிமகனும் 6 லட்சத்து 76 ஆயிரம் ரூபா கடனாளி..!

cash 2

கடந்த 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத இறுதியில் இலங்கை அரசாங்கம் செலுத்த வேண்டி இருந்த மொத்தமான கடன் தொகை 14 ஆயிரத்து 605 பில்லியன் ரூபா என இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிபர அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்தக் கடன் தொகையில் 8 ஆயிரத்து 258.9 பில்லியன் ரூபாய் தேசிய ரீதியில் செலுத்த வேண்டியது எனவும் 6 ஆயிரத்து 346.7 பில்லியன் ரூபாய் வெளிநாட்டு கடன் எனவும் மத்திய வங்கி கூறியுள்ளது.

இதனடிப்படையில் 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத இறுதியில் செலுத்த வேண்டிய இருந்த கடன் தொகையின் அடிப்படையில், இலங்கையில் தனிநபர் கடன் 6 லட்சத்து 69 ஆயிரத்து 981 ரூபாய்.

இதில் 2 லட்சத்து 91 ஆயிரத்து 133 ரூபாய் உள்நாட்டு கடன். இலங்கையை சேர்ந்த அனைத்து பிரஜைகளும் இரண்டு லட்சத்து 91 ஆயிரம் ரூபாய் வெளிநாட்டுக்கு கடன்காரர்கள்.

தனி நபர் கடன் சுமை என்பது நாடு என்ற வகையில் பெற்றுக்கொள்ளும் முழு கடன் தொகை நாட்டில் வாழும் மொத்த சனத்தொகையின் அடிப்படையில் பிரிக்கும் போது தனி நபர் கடன் தொகை கணக்கிடப்படுகிறது.

இலங்கை மத்திய வங்கியின் புள்ளவிபரத்திற்கு அமைய இலங்கையின் சனத் தொகை 21.8 மில்லியனாகும்.

central bank 3

Related posts

இன்றைய (06.12.2024) இரண்டாவது நாள் இடைக்கால பாதீட்டுத் திட்ட விவாதம் – நேரலை

jettamil

பசில் அமெரிக்காவில் இருந்து திரும்பவில்லை – SLPP இல் பதவி மாறுதல் விவாதங்கள்

jettamil

இன்று முதல் எரிபொருள் விலைகள் மாற்றம்!

jettamil

மாவீரர் தினத்தை அனுஷ்டித்தவர்களை உடனே கைது செய்ய கடும் அழுத்தம்

jettamil

மட்டக்களப்பில் சர்வதேச எய்ட்ஸ் தின விழிப்புணர்வு ஊர்வலம்

jettamil

முடங்கிய லாஃப் எரிவாயு விநியோகம் – அரசாங்கத்தின் கடும் எச்சரிக்கை

jettamil

Leave a Comment