Jet tamil
சுவாரஸ்யம்

காற்றால் கர்ப்பம் தரித்து, ஒரே நாளில் குழந்தை பெற்றெடுத்த பெண்மணி..!

girl

25 வயதான சிட்டி ஜைனா என அடையாளம் காணப்படும் அந்த பெண் தான் கர்ப்பமானதை உணர்ந்த 01 மணி நேரத்திலேயே குழந்தையை பெற்றெடுத்ததாக கூறுகிறார்.

இவர் தெற்கு இந்தோனிசியாவில் உள்ள சியாஜூர் என்னும் நகரில் கடந்த வாரம் ஒரு ஆரோக்கியமான பெண் குழந்தையை பெற்றெடுத்ததாக அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனது கர்ப்பத்திற்கு காற்று தான் காரணம் என இவர் கூறிய தகவல், உலகெங்கிலும் பரவி வருகின்றது. போலீசார் இந்த வினோத வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

அத்துடன் இதுக்குறித்து அந்த பெண் உள்ளூர் ஊடகங்களில் கூறும்போது, “பிற்பகல் வேளையின் தொழுகைக்கு பிறகு நான் படுத்து தூங்கிக் கொண்டிருந்தேன். அப்போது எனது பிறப்பு உறுப்பிற்குள் காற்று புகுவதை நான் உணர்ந்தேன்” என்று அவர் கூறியுள்ளார்.

WhatsApp Image 2021 02 18 at 4.07
jettamil.com

அன்று தனது வீடு முழுவதும் காற்று வீசியதன் காரணமாக அவர் தனது அறையில் இருந்ததாக கூறினார். அடுத்து 15 நிமிடங்களுக்கு பிறகு அவரது வயிற்றில் அவர் வலியை உணர்ந்தாராம். அடுத்த சில நிமிடங்களிலேயே அவரது வயிறானது பெரிதாக வளர்வதை அவர் அவதானித்தாராம்.

அதன் பிறகு அவர் ஒரு சுகாதார நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டாராம். அங்கு அவர் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

இந்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுக்குறித்து உள்ளூர் அதிகாரிகள் விசாரனை நடத்தி வருகின்றனர்.

இந்த செய்தியின் காரணமாக அந்த பெண்ணின் குழந்தை குறித்து பல்வேறு வதந்திகளும் வலம் வந்த வண்ணம் உள்ளதாம்.

Related posts

தந்தையின் ஊக்கத்தால் மரதன் ஓட்ட போட்டியில் 10வயது சிறுமி சாதனை – Video

Sinthu

இது தெரிஞ்சா முசிறு எறும்பை விடமாட்டீர்கள் – நன்மைமிகு செவ்வெறும்பு சட்னி

Jet Tamil

வடமராட்சி – உடுத்துறையில் கரையொதுங்கிய விசித்திரமான கப்பல் போன்ற இரதம்!

Sinthu

உலகின் மிகப்பெரிய தேரை அவுஸ்திரேலியாவில் கண்டுபிடிப்பு

Sinthu

பூச்சியைப் பயன்படுத்தி சொக்லேட் தயாரிப்பு..!

Sinthu

ஆண்களை பார்த்தால் அடுத்த நொடியே இந்த அழகிய பெண்ணுக்கு நடக்கும் விபரீத உடலியல் மாற்றம்..!

Sinthu

Leave a Comment