கல்கிஸ்ஸ தொடக்கம் காலி வீதி ஊடாக சுதந்திர சதுக்கம் வரையிலான போக்குவரத்து , நாளை (25) பிற்பகல் 1 மணி தொடக்கம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இலங்கை அமரபுர பிரிவினுடைய உன்னத மஹாநாயக்க சங்கைக்குரிய கொட்டுகொட தம்மாவாச தேரரின் இறுதி கிரியைகள் நடைபெறவுள்ள காரணத்தினால் இவ்வாறு நாளை (25) போக்குவர்த்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
நாளைய தினம் பிற்பகல் 1 மணிக்கு அவருடைய உடல் கல்கிஸ்ஸ தர்மபால விகாரையில் இருந்து வாகன பேரணியுடன் எடுத்துவரப்பட்டு பிற்பகல் வேளையில் 3 மணிக்கு சுதந்திர சதுக்கத்தை வந்தடையவுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் மோட்டார் வாகன சாரதிகள் மாற்று வீதிகளின் ஊடாக பயணிக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.