தென்னிந்திய தமிழ் திரைப்படத்துறையில் சிறந்த குணசித்திர நடிகராக பலரால் அறியப்படும் தீப்பெட்டி கணேசன் காலமானார்.
அவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததாக அவருடைய குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
தமிழ் திரைப்படங்களான பில்லா – 2, ரேனிகுண்டா, நீர்ப்பறவை, தென் மேற்கு பருவக்காற்று போன்ற படங்களில் சிறப்பாக நடித்தவர் தீப்பெட்டி கணேசன்.
இவர் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, மதுரை இராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்த நிலையில், மூத்த மருத்துவர்கள் வரும் முன்பே இவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், இவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தீப்பெட்டி கணேசன் உயிர் பிரிந்த தகவலை, பிரபல திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.