இந்து மக்களால் கொண்டாடப்படக்கூடிய தீபாவளி, பொங்கல், போன்ற பெரிய பண்டிகைகளைப் போல இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்படக்கூடிய முக்கிய பண்டிகை விரதம் நவராத்திரி.
புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் பிரதமை திதியிலிருந்து நவமி திதி வரை கொண்டாடப்படக்கூடிய விரதமாகும்.
9 நாட்கள் கொண்டாடப்படக்கூடிய இந்த பண்டிகை அம்மனுக்குரிய விரத வழிபாடாகும். இந்த நாட்களில் கொலு வைப்பது, நவராத்திரிக்கான உணவு வகைகள் வைத்து இறைவனை வழிபடுவது வழக்கமாகும்.

2021ம் ஆண்டு நவரத்திரி விழா அக்டோபர் 7ம் தேதி (புரட்டாசி 21) தொடங்கி அக்டோபர் 14, 15ம் தேதி முறையே ஆயுத பூஜை எனும் சரஸ்வதி பூஜை மற்றும் விஜய தசமி கொண்டாடப்பட்டு நவராத்திரி கொண்டாட்டம் முடிவடையும்.





