Welcome to Jettamil

ஆசிரியர் தினத்தன்று அதிபர், ஆசிரியர்கள் யாழில் இன்று போராட்டம் !

Share

ஆசிரியர் தினத்தன்று அதிபர் , ஆசிரியர்கள் யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர் .

செம்மணியில் உள்ள வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அலுவலத்திற்கு முன்னாள் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆசிரியர் தினமான இன்றைய தினம் இலங்கை ஆசிரியர் சங்கத்தினரால் நாடளாவிய ரீதியில் 312 கல்வி வலயங்களை மையப்படுத்தி பாரிய எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக யாழ்ப்பாணத்திலும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கல்வி நெருக்கடிக்கு உடனடியாக தீர்வினை வழங்கு , 24 வருட ஆசிரியர்களின் சம்பளம் முரண்பாட்டுக்கு உடனடியாக தீர்வினை வழங்கு , இலவச கல்வியை ராணுவ மயமாக்கும் கொத்தலாவல் சட்டமூலத்தை உடனடியாக ரத்து செய் ஆகிய மூன்று அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அதிபர் , ஆசிரியர்களால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகின்ற நிலையில் கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு சுகாதார நடைமுறைகளை பின்பற்றி அதிபர்கள் , ஆசிரியர்கள் குறித்த போராட்டத்தினை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை