தமிழகத்தில் அடுத்த 3 மாதங்களில் வரக்கூடிய தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்தில் அமரும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
வேலூர் மாநகர தி.மு.க. அலுவலகத்தில் அண்ணா – கருணாநிதி ஆகியோரது உருவச் சிலைகளைத் திறந்து வைத்து பேசிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தி.மு.க.வின் தேர்தல் பிரச்சாரத்தை பொறுத்தவரையில் இன்றைக்கு இருக்கும் சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் வியூகம் வகுத்துள்ளது என தெரிவித்தார்.
பல்வேறு கட்டங்களை நிறைவேற்றி அதன் மூலமாக பிரச்சாரத்தை தொடர்ந்து நடத்திக் கொண்டிருப்பதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
உயிரையே பணயம் வைத்து கொரோனா காலத்தில் மக்களை சந்தித்த ஒரே இயக்கம் தி.மு.க. என்றும் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.