நாகர்கோவிலில் கரை ஒதுங்கிய மிதவை கலம்
வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கிழக்கு கடற்றொழிலாளர் சங்க எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் வத்தை வடிவான 18 அடி நீளம் கொண்டதும் 10 அடி அகலம் கொண்ட மிதவைக்கலம் ஒன்று கரைக்கு அடித்து வரப்பட்டுள்ளது.
இன்று காலை கரையொதுங்கிய குறித்த கலத்தை மீனவர்கள் கடும் முயற்சி எடுத்து கரையில் இழுத்து வைத்துள்ளனர்.
கரையொதுங்கிய குறித்த கலம் தொடர்பில் பொலிசார் மற்றும் கிராம அலுவலருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரு சில நாட்களுக்கு முன்பு வடமராட்சி கிழக்கு உடுத்துறை வேம்படி கடற்கரையிலும் மிதவை ஒன்று கரையொதுங்கி பரபரப்பை ஏற்படுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.