இலங்கையில் அனைத்து பாடசாலைகளிலும் நிகழ்ச்சிகளை நடத்துதற்கு மீள் அறிவித்தல் வரும்வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை கல்வியமைச்சு அறிவித்துள்ளது.கோவிட் தொற்று பரவல் நிலைமையை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த அறிவிப்பு தொடர்பில் அனைத்து மாகாண, வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் பாடசாலை அதிபர்கள் ஆகியோருக்கு கல்வியமைச்சின் செயலாளரினால் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.