Welcome to Jettamil

மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகாந்தா கடிதம்…

Share

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு தமிழ்த் தேசியக கட்சியின் தலைவரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகாந்தா கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ள குறித்த கடிதத்தில், துயரக் கடலில் தொடர்ந்து தவித்துக் கொண்டிருக்கும் இலங்கை தமிழர் பால் தாங்கள் வெளிப்படுத்தி நிற்கும் பாசத் துடிப்புக்கும் பரிவுக்கும் எமது மனங்கனிந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

இலங்கைத் தீவில் வாழ முடியாமல் இந்திய நாட்டிற்கு இடம் பெயர்ந்து தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ள தமிழ் உடன் பிறப்புக்களின் நல்வாழ்வுக்காய் தாங்கள் முன்னெடுத்திருக்கும் சீரிய

செயற்திட்டங்களுக்கு எமது மக்களின் சார்பில் பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றோம்.

தங்கள் நற்பணிகள் அனைத்தும் வெற்றி பெற எங்கள் நல்வாழ்த்துக்கள்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை