மோப்பநாயின் உதவியுடன் பல்வேறு போதைப்பொருட்களுடன் இருவர் கைது
யாழ்ப்பாண மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் நிஷாந்த தலமையில் இயங்கும் யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவின் தகவலின் அடிப்படையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் நேற்று இருவர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களுடைய வீட்டை மோப்ப நாயின் உதவியுடன் சுற்றிவளைத்த பொழுது போதை மாத்திரைகள் மற்றும் வியாபாரம் செய்த பணம், கஞ்சா, ஹெரோயின் போன்றவை கைபெற்றபட்டன.
இவர் போதை பொருட்கள் விற்பனை செய்யும் கோண்டாவிலை சேர்ந்த பிரதான நபர் என தெரிவிக்கப்படுகிறது.
இவரை நேற்று யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் கைது செய்து, கோப்பாய் பொலிஸ் நிலையம் அழைத்து சென்று அவருடைய தொலைபேசி உரையாடல்கள் போன்றவற்றை அடிப்படையாக வைத்தது வீட்டை சோதனை செய்தார்கள். இந்நிலையில் கோப்பாய் பொலிஸ் உதவியுடன் குறிப்பிட்ட பொருட்கள் கைப்பற்றபட்டன.