Jet tamil
யாழ்ப்பாணம்

யாழில் தொற்று இல்லாதவர்களின் கடைகளை திறக்க அனுமதி!

யாழ் வர்த்தகர்களிடம் பெறப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் கொவிட் தொற்றுக்கு உள்ளானோரின் கடைகள் தவிர்ந்த ஏனைய கடைகளை நாளை (வியாழக்கிழமை) திறக்க அனுமதி வழங்கியுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

கொரோனா நிலமைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”கடந்த 26ஆம் திகதி முதல் யாழ் நகரத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு வர்த்தக நிலையங்களில் பணியாற்றுவோர் தனிமைப்படுத்தலுக்குள்ளாக்கப்பட்ட நிலையில்,

கடந்த 14 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட இரண்டு பி.சி.ஆர் பரிசோதனைகளில்தொற்று இனங்காணப்பட்டோரின் கடைகள் தவிர்ந்த ஏனைய கடைகளை நாளை (வியாழக்கிழமை) காலை முதல் திறப்பதற்கு அனுமதிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்று அவசரமாக கூடிய யாழ் மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியில் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டதாக வர்த்தகர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் தொற்று உறுதி செய்யப்பட்டோர் தவிர்ந்த ஏனையோரின் கடைகளை நாளை முதல் திறப்பதற்கு அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் தற்போது பண்டிகை காலம் என்பதால் மக்கள் வழமை போன்று ஒன்று கூடல் செயற்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்க்கவேண்டும் பொதுமக்கள் அவதானத்துடன்  செயற்பட வேண்டும்.

அத்துடன் யாழ் நகரப் பகுதிகளில் வீதித் தடைகளை ஏற்படுத்தி பொதுமக்களை ஒன்று கூடாத வண்ணம் செயற்படவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது,

தற்போது அபாய நிலை இன்னும் நீங்கவில்லை எனவே தற்போதைய நிலையில் பொது மக்களை ஒன்று கூடலை தடுப்பதற்கு ரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாகவும்’  அவர் தெரிவித்தார்

Related posts

யாழில் இடம்பெற்ற சர்வதேச குடும்ப நல உத்தியோகத்தர் தின நிகழ்வு…!

Sinthu

வடக்கு மாகாண துறைசார் வல்லுநர்களுக்கு இடையிலான துடுப்பாட்டப் போட்டி

jettamil

யாழில் மடு அன்னையின் திருச்சொரூப வீதியுலா…

kajee

வலி.வடக்கிலிருந்து யாழ் நகருக்கான புதிய பேருந்து சேவை ஆரம்பம்…!

kajee

தெல்லிப்பழை பாடசாலையில் கார்த்திகைப் பூ விவகாரம் – பொலிஸாருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பாணை…!

kajee

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து : பரிதாபகரமாக பலியான விவசாயி

kajee

Leave a Comment