Welcome to Jettamil

உலகின் மிகப்பெரிய கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது…

Share

உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பலான எவர் ஏஸ் (EVER ACE) தனது பயண வழியில் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது என இலங்கை துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது.

இக் கப்பல் உலகின் முன்னணி கொள்கலன் கப்பல் நிறுவனங்களில் ஒன்றான எவர்கிரீனுக்கு சொந்தமானதென தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கப்பல் 400 மீற்றர் நீளமும், 61.5 மீற்றர் அகலமும் கொண்டதோடு 24,000 கொள்கலன்களைக் கொண்டுசெல்லும் திறன்கொண்டது.

இவ்வளவு பெரிய கப்பல்க ளைகையாளும் திறன் கொண்ட 24 துறைமுகங்கள் மட்டுமே உலகில் உள்ளன.

குறிப்பாக தெற்காசியாவில் அந்தக் கப்பல் நங்கூரமிடக் கூடிய ஒரேயொரு துறைமுகம் கொழும்பு துறைமுகம் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை