இத்தாலிக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை நாட்டில் இருந்து புறப்பட்டார்.
போலோக்னா பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ள சர்வதேச மாநாட்டில் தலைமை உரை நிகழ்த்தும் முகமாக குறித்த விஜயம் அமைந்துள்ளது.
இராஜதந்திர சந்திப்புகளை அடிப்படையாகக் கொண்டு பிரதமரின் இத்தாலி விஜயம் திட்டமிடப்பட்டுள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை மூடிமறைக்க இத்தாலி பயணம் அமைந்துள்ளது என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அண்மையில் குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்திருந்தார்.
அதனை அடுத்து பிரதமரின் இத்தாலி விஜயத்தின் போது பாப்பரசரை சந்திப்பது குறித்து இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சு அறிவித்திருந்தது.