Welcome to Jettamil

மீண்டும் முடங்கும் நாடு..?

Share

எதிர்வரும் 21ம் திகதிக்கு பின் நாடு மீண்டும் திறக்கப்பட வேண்டுமாக இருந்தால் விதிக்கப்பட வேண்டிய வழிகாட்டல்களுடனான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார். 

ஜனாதிபதி தலைமையில் கோவிட் தடுப்பு செயலணியுடனான விசேட கலந்துரையாடலொன்று இன்றைய தினம் இடம்பெற்றிருந்தது. 

தேசிய கோவிட் தடுப்புச் செயலணியின் தலைவரான இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவிடம் ஜனாதிபதி குறித்த அறிக்கையை கோரியுள்ளதாக தெரியவருகிறது. 

அத்துடன், மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்தும் பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்தும் அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலைகளை ஆரம்பிக்க முன் மாணவர்களின் பெற்றோர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் பரிந்துரை முன்வைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

நாட்டில் கோவிட் தொற்று தீவிரமடைந்த நிலையில் கடந்த 20ஆம் திகதி இரவு பத்து மணி முதல் தனிமைப்படுத்தல் உத்தரவு இலங்கையில் அமுல்படுத்தப்பட்டது. 

அதனையடுத்து தொடர்ச்சியாக தனிமைப்படுத்தல் ஊரடங்கானது நீடிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று மீண்டும் குறித்த உத்தரவு நீடிக்கப்பட்டு எதிர்வரும் 21ஆம் திகதி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை