மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கு நேற்று நள்ளிரவு முதல் எதிர்வரும் இரு வாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.
இக்காலப்பகுதியில் மாகாணங்களுக்கு இடையிலான பொதுப்போக்குவரத்து சேவைகளும் முழுமையாக ரத்து செய்யப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே போக்குவரத்திற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.