நாடு முழுவதும் ஆயுதம் தாங்கிய படையினரை கடமையில் ஈடுபடுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விசேட கட்டளையை பிறப்பித்துள்ளார்.
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இந்த கட்டளை குறித்து நாடாளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் 12 வது ஷரத்திற்கு அமைய தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி ஜனாதிபதி இந்த கட்டளை பிறப்பித்துள்ளார்.
சபாநாயகர், நாடாளுமன்ற சபை நடவடிக்கைளில் ஆரம்பத்தில் இந்த கட்டளை பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.