Welcome to Jettamil

பாடசாலைகளில் வழமைக்கு திரும்பிய கற்றல் செயற்பாடுகள்…

Share

கொவிட் தொற்று காரணமாக நாடளாவிய ரீதியில் இடை நிறுத்தப்பட்டிருந்த பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள் இன்று முதல் முழுமையாக ஆரம்பமாகியுள்ளது. 

நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளிலும் இன்று அனைத்து வகுப்பு மாணவர்களுக்குமான கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் தடிமன், இருமல், காய்ச்சல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் காணப்படும் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் எனவும் கல்வி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது. 

கடந்த மாதம் 21ம் திகதி ஐந்தாம் தரத்திற்கு உட்பட்ட மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இந் நிலையில் இந்த மாதம் 8ம் திகதி தரம் 11 முதல் 13 வரையான மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இதனையடுத்து இன்று முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்குமான கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை