நாட்டில் எதிர்வரும் நாட்களில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடிய நிலை உருவாகியுள்ளதாக கனியவள தேசிய சேவையாளர்கள் சங்கத்தின் இணைப்பாளர் ஆனந்த பாலித்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தற்போது 11 நாட்களுக்கு போதுமான டீசல் இருப்பில் உள்ளதாகவும் 10 நாட்களுக்கு போதுமான பெற்றோல் மாத்திரமே இருப்பில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில்,
ரிபொருட்களை சிக்கனமாக பயன்படுத்துமாறு எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடு மற்றும் அந்நிய சொலாவணி கையிருப்பு குறைவு போன்ற விடயங்களை கருத்திற் கொண்டு இதனை அறிவிப்பதாக அவர் கூறியுள்ளார்.
நாட்டுக்குத் தேவையான சுகாதார தேவைகளை பூர்த்தி செய்யவே அதிக டொலர்கள் செலவு செய்ய வேண்டி இருப்பதாகவும் அதனால் எரிபொருள் கொள்வனவிற்கு அந்தளவு செலவு செய்ய முடியாது எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.