யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 68 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் நேற்று 128 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று 740 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதற்கமைய யாழ்.மாவட்டத்தில் பேர் 68 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் 32 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 06 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் 18 பேருக்கும் கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, வசாவிளான் தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒருவரும் கொரோனாத் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.