களுகங்கைப் பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கையை காணப்படுவதாக இலங்கை நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதாவது, இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மடுல்ல, நிவித்திகல, இரத்தினபுரி, குருவிட்ட, அயகம மற்றும் அலபாத பிரதேச செயலாளர் பிரிவுகளின் தாழ்வான பகுதிகளில் அடுத்த 24 மணித்தியாலங்களில் கணிசமான அளவு வெள்ளப்பெருக்கு ஏற்படக் கூடும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் அப்பிரதேசங்களில் உள்ள மக்கள் இவ்விடயத்தில் மிகவும் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் மேலும் கோருகிறது. களு கங்கை வடிநிலம் தொடர்பாக நீர்ப்பாசன திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தெதுருஓயா நீர்த்தேக்கத்தில் தலா 03 அடி வீதம் 04 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (31) பிற்பகல் வான் கதவுகள் திறக்கப்பட்டன.
வான்கதவுகள் திறக்கப்படுவதால் வினாடிக்கு 8,400 கன அடி நீர் தெதுரு ஓயாவிற்கு திறந்து விடப்படும் என தெதுரு ஓயா நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான நீர்ப்பாசன அலுவலகம் தெரிவித்துள்ளது.
தெதுறு ஓயாவின் நீர்மட்டம் 72 அடியாகவும், நீர்த்தேக்கத்திற்கு இதுவரை 70.8 அடி நீர் கிடைத்துள்ளதாகவும் நீர்ப்பாசன அலுவலகம் தெரிவித்துள்ளது.
தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்படுவதால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்படாது என நீர்ப்பாசன பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.