தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் அவ்வப்போது கிடைத்து வரும் மழை எதிர்வரும் 05.09.2022 வரை தொடர வாய்ப்புள்ளது.
அதாவது, வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக இக்காலநிலை வருகின்றது என யாழ்.பல்பலைகழக புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நா.பிரதீபராஜா கூறியுள்ளார்.
ஆகவே, வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் அவ்வப்போது பரவலாக இடிமின்னலுடன் கனமழை நீடிக்க வாய்ப்புள்ளதால் மக்கள் இடி மின்னல் மற்றும் வெள்ள அனர்த்தங்களில் இருந்து பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.