நாட்டில் தற்போது பால் மா பற்றாக்குறை உச்சக்கட்டத்தை எட்டியுள்ளமையினால் நுகர்வோர் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
பிரதேசங்களின் பால் மா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையினால் தாங்கள் மிகவும் நெருக்கடி நிலைமைக்குள்ளாகியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
கடைகளில் பால் மா இல்லாததால் தங்கள் பிள்ளைகளுக்கு ஒரு நேரமேனும் பால் வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
தங்களுக்கு உரிய முறையில் பால் மா கிடைக்காமையினால் தங்களால் அதனை வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதென கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.