பயங்கர ஆயுதங்கள் தமிழர் பகுதிகளில் தொடர் மீட்பு
கிளிநொச்சி – இயக்கச்சி பகுதியில் நேற்று தனியார் காணியில் வெடிக்காத நிலையில் உள்ள குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
இயக்கச்சி பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது காணியைத் துப்பரவு செய்துகொண்டிருந்தபோதுஇ அதனுள் பயங்கரமான குண்டுகள் இருப்பதைக் கண்டு உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் அளித்தார்.
இந்தத் தகவலை அடுத்துஇ மருதங்கேணி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துஇ அப்பகுதிக்கு உடனடியாகப் பாதுகாப்பினைப் பலப்படுத்தியுள்ளனர்.
இன்று நீதிமன்ற அனுமதியைப் பெற்ற பின்னர்இ இந்த வெடிக்காத குண்டுகளை மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர் பகுதிகளிலிருந்து தொடர்ந்து பயங்கர குண்டுகள் மீட்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.





