Welcome to Jettamil

மண்ணுக்குள் புதையுண்ட உடல்களில் இருந்து துர்மணம் – அச்சத்தில் மக்கள்

Share

மண்ணுக்குள் புதையுண்ட உடல்களில் இருந்து துர்மணம் – அச்சத்தில் மக்கள்

நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை, இறம்பொடை, கெரண்டியெல்ல உள்ளிட்ட பகுதிகளில் மண்ணுக்குள் புதையுண்ட உடல்களில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அங்குள்ள மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

அதிதீவிர வானிலையால் குறித்த பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு பலரது உடல்கள் மீட்கப்பட்டாலும், மீட்கப்படாத உடலங்களில் இருந்தே இந்த துர்மணம் வெளியாகலாம் எனப் பிரதேச மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் தொற்றுநோய்கள் பரவக்கூடும் எனவும் மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்களின் இந்தச் சந்தேகம் தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க விளக்கமளித்துள்ளார்.

பேரிடர் என்பதால் மண்ணுக்குள் அநேகமான உடலங்கள் புதையுண்டிருக்கலாம். எனினும், புதையுண்டிருக்கலாம் என நம்பப்படும் உடலங்களில் இருந்து துர்மணம் வீசுவதால் எவ்வித தொற்று நோய்களும் ஏற்படாது, என அவர் குறிப்பிட்டார்.

இடம்பெயர்ந்தோருக்கான முகாம்கள் மற்றும் அனர்த்தங்கள் பதிவாகியுள்ள பிரதேசங்களில் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், இதனால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை