மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய விசேட குழுவின் ஆலோசனைக்கமைய விரைவாக இந்த நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
கொவிட் தடுப்பூசி மற்றும் தொற்று நோய் தொடர்பிலான விசேட குழுவினால் பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட வேண்டிய முறை தொடர்பில் ஒழுங்கு முறை ஒன்று தயாரிக்கப்படுகிறது.
இதனை தயாரித்த பின்னர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்