Welcome to Jettamil

யாழ் – பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஒத்திவைப்பு…

Share

யாழ் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் 2வது பகுதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் 16, 17, 18ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த பட்டமளிப்பு விழா  அடுத்த மாதம் 7,8,9ஆம் திகதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன என பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பட்டமளிப்பு விழா ஏற்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாக் குழு இன்று (புதன்கிழமை) காலை துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் கூடியது.

இதன்போதே இந்த முடிவு எட்டப்பட்டதாக பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், தெரிவித்துள்ளது.

ஆயினும் சூழ்நிலைகளைப் பொறுத்து குறித்த தினங்களில் பட்டமளிப்பு விழாவைத் திட்டமிட்டபடி பட்டதாரிகளுடன் நடாத்த முடியாத நிலைமை ஏற்பட்டால், மாணவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு பட்டமளிப்பு விழாவை நிகழ்நிலையில் நடாத்தி பட்டங்களை உறுதிப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பட்டமளிப்பு விழாவை நிகழ்நிலைக்கு மாற்றுவது தொடர்பான இறுதித் தீர்மானம் இம்மாதம் 23 ஆம் திகதி அறிவிக்கப்படும் என்றும் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில்,தெரிவித்துள்ளது

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை