10 சுகாதார சேவைகள் தொழிற்சங்க பணிப் பகிஸ்கரிப்பு
பொது சுகாதார பரிசோதகர்கள் உட்பட 10 சுகாதார சேவைகள் தொழிற்சங்கங்கள் தமக்கு 35,000 ரூபா கொடுப்பனவு வழங்குமாறு கோரி 48 மணிநேர பணிப்பகிஷ்கரிப்பை இன்று காலை 8 மணிக்கு ஆரம்பித்தனர்.
இதனால் யாழ்ப்பாண மாவட்டத்தில் பொது சுகாதார பரிசோதகர்கள், மருத்துவ மாதுக்கள், தாதியர்களின் சேவை உட்பட பல சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.