Welcome to Jettamil

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற “பயங்கரவாதி” நாவல் வெளியீட்டு விழா!

Share

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற “பயங்கரவாதி” நாவல் வெளியீட்டு விழா!

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், ஈழத்து எழுத்தாளரும் யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் மாணவர் ஒன்றிச் செயலாளருமான தீபச்செல்வனின் “பயங்கரவாதி” நாவல் அறிமுகநிகழ்வு இன்று யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில், யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் கே.துவாரகன் தலைமையில் நடைபெற்றது.

இவ் நிகழ்வில் முதன்மைவிருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எஸ்.ரகுராம் அவர்கள் கலந்துகொண்டு பயங்கரவாதி நாவல் தொடர்பான கருத்துக்களை வழங்கினார்.

சிறப்புரையினை யாழ்ப்பாண பல்கலைக்கழக அரசறிவியல் துறை தலைவர் போராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் நிகழ்த்தினர். நாவல் வெளியீட்டுயுரையினை நாடக, கலை விமர்சகர் அ.சத்தியானந்தன் நிகழ்த்தினர்.
விமர்சன உரையினை இந்து கற்கைப்பீட சிரேஷ்ட விரிவுரையாளர் செல்வமனோகரன் நிகழ்த்தினார்.

இவ் நாவலின் முதற் பிரதியினை யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட பேராசிரியர் கலாநிதி எஸ்.ரகுராம் வெளியிட்டு வைக்க, அதனை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் சிந்துஜன் பெற்றுக் கொண்டார்.

இதில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் மாணவ அமைப்பினர்கள், ஊடகத்துறையினர் கல்விசமூகத்தினர் பலரும் கலந்துகொண்டனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை