யாழ்ப்பாணத்தில் காற்றுடன் கூடிய மழையால் 14 பேர் பாதிப்பு
யாழ்ப்பாண மாவட்டத்தில் வீசிய காற்றுடன் கூடிய பலத்த மழை காரணமாக மூன்று குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
பாதிப்பு விவரங்கள் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:

வேலணை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஜே/28 கிராம சேவகர் பிரிவில், காற்றுடன் கூடிய மழையால் இரண்டு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. இதன் காரணமாக இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சங்கானை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஜே/169 கிராம சேவகர் பிரிவில், ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், நான்கு பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நிவாரண நடவடிக்கைகள் விரைவில் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.






