Welcome to Jettamil

நிலவும் சீரற்ற வானிலையால் 15 மாவட்டங்கள் பாதிப்பு: மக்களுக்கு வெளியான அறிவிப்பு!

Share

நிலவும் சீரற்ற வானிலையால் 15 மாவட்டங்கள் பாதிப்பு: மக்களுக்கு வெளியான அறிவிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 15 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்று அணர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (Disaster Management Center) இன்று அறிவித்துள்ளது.

இதன் அடிப்படையில், 6,785 குடும்பங்களைச் சேர்ந்த 20,300 பேர் தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீரற்ற வானிலையின் காரணமாக, 2 பேர் உயிரிழந்துள்ளனர், மற்றும் பல்வேறு விபத்துகளில் 3 பேர் காயமடைந்துள்ளனர்.

மேலும், சீரற்ற வானிலை காரணமாக கண்டி – மஹியங்கனை வீதி நேற்று இரவு மூடப்பட்டு, தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில், வலப்பனை பிரதேச செயலகப் பிரிவின் மலபட்டாவ பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் வலப்பனையில் இருந்து ஹகுரான்கெத்த வழியாக கண்டி செல்லும் பாதை மூடப்பட்டுள்ளதாக அணர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.

மேலும், நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக, பல மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (National Building Research Organization) மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொதுமக்கள், நிலவும் சீரற்ற வானிலையினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை