இடியுடன் கூடிய கனமழை: பொதுமக்களுக்கு எச்சரிக்கை
கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் வடமேற்கு மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லி மீட்டர் வரை கடுமையான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று (22) வெளியிடப்பட்ட அறிக்கையில், வளிமண்டலவியல் திணைக்களம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கையின் படி, கிழக்கு, வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களுடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடைவெளியில் மழை பெய்யக்கூடும்.
மேலும், மேற்கு மாகாணம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் காலை நேரங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் (30-40) கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது, மின்னல் மற்றும் கடுமையான காற்றின் தாக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.