Welcome to Jettamil

25 ஆம் திகதி வடக்கு, கிழக்கு தழுவிய நிர்வாக முடக்கல் போராட்டம் – தமிழ் கட்சிகள் அழைப்பு

Share

எதிர்வரும் 25ஆம் திகதி வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் முழுமையான நிர்வாக முடக்கல் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தமிழ் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.

வடக்கில், கிழக்கில் தமிழர் நிலங்களில் ஆக்கிரமிப்பு, பௌத்தமயமாக்கல் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நிறைவேற்ற முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு எதிராகவும் இந்த நிர்வாக முடக்கல் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தமிழ் கட்சிகளுக்கிடையில் யாழ்ப்பாணத்தில் நேற்று  இடம்பெற்ற கலந்துரையாடலில் குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில், இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், ஜனநாயக போராளிகள் கட்சியினர் மற்றும் தமிழ் தேசிய கட்சியினரும் பங்கேற்றனர்.

எதிர்வரும் 25ஆம் திகதி பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை அரசாங்கம் நாடாளுமன்றில் முன்வைக்கவுள்ளது.

இதனால், அன்றைய தினத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முழுமையான நிர்வாக முடக்கல் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை