Welcome to Jettamil

நல்லூர் சங்கிலியன் பூங்காவில் 26ஆம் திகதி தாவரங்களை அடையாளம் காணும் தாவராவதானி போட்டி

Share

போர்க் காலத்திற் கூட இயற்கை எனது நண்பன் என்று இயற்கையை நேசித்த தமிழர் வாழ்வியல் இன்று இயற்கையில் இருந்து விலகிச் சென்று கொண்டிருக்கிறது. இதுவே இன்றைய சுற்றுச் சூழல் பிரச்சினைகளுக்கெல்லாம் மூல காரணம். இதனைக் கருத்திற் கொண்டு தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் இயற்கையை நேசிக்கக் கற்றுக் கொடுக்கும் வகையில் தாவரங்களை அடையாளம் காணும் தாவராவதானி போட்டி ஒன்றை நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் கார்த்திகை வாசம் மலர்க் கண்காட்சியில் 26ஆம்திகதி ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 3 மணிக்கு நடாத்த உள்ளது.

தாவராவதானி போட்டியில் பால் , வயது வேறு பாடின்றி முன் பதிவு இல்லாமல் எவரும் கலந்து கொள்ளமுடியும் எனவும்,போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு தாவராவதானி சான்றிதழோடு பரிசுகளும் வழங்கப்படும் எனவும் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் அறிவித்துள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை