Welcome to Jettamil

தாய்ப்பால் அருந்திவிட்டு தூங்கிய 3 மாதக் குழந்தை உயிரிழப்பு!

Share

தாய்ப்பால் அருந்திவிட்டு தூங்கிய 3 மாதக் குழந்தை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினரின் மூன்று மாதக் குழந்தை ஒன்று, தாய்ப்பால் அருந்திய பின்னர் ஏற்பட்ட விக்கலை அடுத்துத் தூங்கிய நிலையில், அசைவின்றி காணப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று இரவு (நவம்பர் 5, 2025) குழந்தை தாய்ப்பால் அருந்திய பின்னர் விக்கல் எடுத்துள்ளது.

அதனைத் தொடர்ந்து தாய் குழந்தையைத் தாலாட்டியதை அடுத்து, குழந்தை தூங்கியுள்ளது.

நீண்ட நேரமாகியும் குழந்தை தூக்கத்திலிருந்து எழும்பாததால், தாயார் குழந்தையை எழுப்ப முற்பட்ட வேளை குழந்தை அசைவின்றி காணப்பட்டுள்ளது.

உடனடியாகக் குழந்தையை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோது, குழந்தை ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.

குழந்தையின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாகச் சுன்னாகம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை