Welcome to Jettamil

பாடகி யொஹாணி டீ சில்வாவுக்கு 4 கோடி ரூபாய் பெறுமதியான காணி வழங்கிவைப்பு…

Share

அமைச்சரவை தீர்மானத்திற்கமைய பிரபல பாடகி யொஹாணி டீ சில்வாவுக்கு வழங்கப்பட்டிருக்கும் காணி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

பத்தரமுல்லை ரொபர்ட் குணவர்தன வீதியில் உள்ள குறித்த காணியின் பெறுமதி 4 கோடி ரூபாய் என அரசாங்க மதிப்பீட்டு திணைக்களம் மற்றும் காணி பதிவு திணைக்கள தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

அப் பிரதேசத்தில் ஒரு பேர்ச் காணியின் விலை தற்போது 4 மில்லியன் ரூபாவை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமைச்சரவை யோசனைக்கமைய அவருக்கு 9.68 பேர்ச் காணி வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்ற அணி வீரர்களுக்கு 99 வருட குத்தகை அடிப்படையில் ஒதுக்கப்பட்ட காணிக்கு அருகாமையில்,

பாடகி ஹொயானிக்கான காணி இருப்பதாக அமைச்சரவை தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் தனது நாட்டின் நற்பெயரை அங்கீகரிப்பதற்காகவே இந்த காணியை அவருக்கு வழங்கியதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை